in

ரஜினி நடித்த சிவாஜி படத்தில் வில்லனாக நடித்த நடிகர் சுமன் பேட்டி

ரஜினி நடித்த சிவாஜி படத்தில் வில்லனாக நடித்த நடிகர் சுமன் பேட்டி

தஞ்சையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாநில அளவிலான கராத்தே போட்டி.

பெண்கள் கராத்தே மற்றும் மார்ஷல் ஆர்ட் போன்ற தற்காப்பு கலைகளை முறையாக கற்றுக்கொண்டால் தன்னம்பிக்கை வரும், பாலியல் தொந்தரவு போன்ற பிரச்னைகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம், எதிரிகளை அடித்து தூக்கி போட்டுவிடலாம் தஞ்சையில் கராத்தே போட்டியை துவக்கிவைத்த ( சிவாஜி படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்த) நடிகரும் கராத்தே வீரருமான சுமன் வலியுறுத்தல்.

தஞ்சையை அடுத்துள்ள பெரியார் மணியம்மை கல்லூரியில் இன்று மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது

கராத்தே போட்டியை துவக்கிவைத்த நடிகர் சுமன் செய்தியாளர்களிடம் பேசுகையில் பெண்களுக்கு தற்காப்பு கலையை கற்றுக்கொடுக்க வேண்டும் என்றவர், பெண்கள் கராத்தே, மார்ஷல் ஆர்ட் போன்ற தற்காப்பு கலையை கற்றுக்கொண்டால் தன்னம்பிக்கை அதிகரிக்கும் பாலியல் தொந்தரவு யாரேனும் செய்தால் அடித்து தூக்கிப் போட்டுவிடலாம் என்றவர் பெற்றோர்கள் பெண்களுக்கு தற்காப்பு கலையை பயிற்றுக்க வேண்டும் என்றார்.

பின்னர் நடிகர் விஜய் முதல்வராக வாய்ப்பு குறித்த கேள்விக்கு யாருக்கு கிரகங்கள் எல்லாம் ஒத்து வருதோ அவர்கள் தலையெழுத்தை யொட்டியே ஜெயிக்க முடியும்

பவன்கல்யாண் டைம் நன்றாக இருந்தது துணை முதல்வராகி விட்டார் விஜய் டைம் எப்படி இருக்குன்னு தெரியாது என்றார்.

What do you think?

புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மனுக்கு முத்து பல்லக்கு பெருவிழா

6 கோவில்களில் இருந்து சிவப்பெருமான் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி சிவப்பெருமான்