திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியான “சம வேலைக்கு சம ஊதியம்” என்ற கோரிக்கை நிறைவேற்ற வலியுறுத்தி
இடைநிலை ஆசிரியர்கள் இரண்டாவது நாளாக பள்ளி புறக்கணிப்பு செய்து காத்திருப்பு போராட்டம்
தேனி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் முன்பு இடைநிலை ஆசிரியர்கள் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.


திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி கூறியது போல இடைநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை கலைந்து மற்ற மாநிலங்களுக்கு ஏற்றார் போல் ஊதியத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன
16 ஆண்டுகளாக ஊதிய முரண்பாடுகளை களையாமல் குறைந்த ஊதியம் பெற்று வருவதாகவும், ஆசிரியர்கள் தகுதி தேர்வு எழுதி பல ஆண்டுகளாக பணிபுரிந்தும் கடைநிலை ஊழியர்கள் பெரும் சம்பளத்தை தான் நாங்கள் பெற்று வருகிறோம் என கூறும் ஆசிரியர்கள்.
“சம வேலைக்கு சம ஊதியம்” என்பதை வலியுறுத்தி அரசாணை வெளியிடும் வரை பள்ளி புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


