in

புதுச்சேரி அரசை கண்டித்து போராட்டங்கள் நடத்தப் போவதாக இந்தியா கூட்டணி கட்சியின் அவசர ஆலோசனை கூட்டம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி மற்றும் மின் கட்டணம் உயர்வு போன்ற மக்கள் விரோத போக்கில் செயல்படும் புதுச்சேரி அரசை கண்டித்து போராட்டங்கள் நடத்தப் போவதாக இந்தியா கூட்டணி கட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டணியின் தலைவர் வைத்திலிங்கம் எம்பி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, திமுக மாநில அமைப்பாளர் சிவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அமைப்பாளர் சலீம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்பாளர் தேவப்பொழிலன் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் புதுச்சேரியில் தேர்தல் ஆணையம் மேற்கொள்ள உள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை எதிர்ப்பது மற்றும் புதுச்சேரியில் உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டணத்தை எதிர்த்து போராட்டங்கள் நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் வைத்தியலிங்கம் எம்பி…

புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி மேற்கொள்ளப்பட உள்ளது இதன் மூலம் பிஜேபி ஆட்சியைப் பிடிக்க நினைப்பதாக குற்றம் சாட்டினர்.

12 மாநிலங்களில் மட்டும் வாக்காளர் பட்டியல் திருத்துவது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர் இந்த பணியை தேர்தலுக்கு ஒரு வருடத்திற்கு முன்பு செய்திருக்கலாம் அல்லது தேர்தல் முடிந்த பிறகு செய்யலாம், தேர்தல் நேரத்தில் எதற்காக அவசர அவசரமாக மேற்கொள்ள வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

மேலும் தமிழகத்தை பின்பற்றி வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை எதிர்ப்பது குறித்து வருகின்ற திங்கள்கிழமை அன்று தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து மனு அளிப்பது மேலும் புதுச்சேரியில் மின் கட்டண உயர் உள்ளிட்ட மக்கள் விரோத செயலில் ஈடுபடும் புதுச்சேரி அரசை கண்டித்து, தலைமை செயலகம் மற்றும் மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய திமுக மாநில அமைப்பாளர் சிவா…

ஜனநாயகத்தை நம்பக்கூடிய மக்கள் புதுச்சேரியில் இருக்கிறார்கள் ஜனநாயகம் முறைப்படி தேர்தலை சந்திப்போம் என்று தெரிவித்த அவர் இஸ்லாமியர் கிறிஸ்தவர்கள் மற்றும் தலித் ஓட்டுகளை பிரித்து விடலாம் என பாஜகவின் பி டீம் ஆக சில பேர் களமிறங்கி இருக்கிறார்கள், ஒருபோதும் அது நடக்காது அதையும் மீறி இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றி அடையும் எனவும் அவர் தெரிவித்தார்.

What do you think?

திண்டிவனம் இரட்டணை ஶ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஶ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி பெருவிழா திருக்கல்யாணம்