40 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரச மரத்தை வேருடன் எடுத்து குத்தாலம் காவல் நிலைய வளாகம் பின்புறத்தில் நடவு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த குத்தாலத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்ட உள்ள இடத்தில் இருந்த சுமார் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த இடம் விட்டு இடம் நகர்ந்த 40 ஆண்டு பழமையான அரசமரம் வியப்புடன் பார்த்த மக்கள்.
காலநிலை மாற்றத்தினால் புவி வெப்பமடைதலை தடுக்கும்
அரச மரத்தை கிளைகள் அகற்றப்பட்டு அதன் கீழ்ப்பகுதி தனியாக வேர் பகுதி பாதிக்கப்படாமல் எடுக்கப்பட்டு வேறு இடத்தில் நடப்பட்டது.

முன்னதாக அந்த மரத்தை கிரேனின் உதவியுடன் மரத்தின் வேர்களின் மையப் பகுதி சேதமடையாமல் பெரிய குழி தோண்டி கிரேனின் உதவியுடன் முழுவதும் எடுக்கப்பட்டது பின்னர்.
இயந்திரம் மூலம் கொண்டுவரப்பட்டு மாற்று இடத்தில் இயந்திரம் மூலம் நடவு செய்து மரம் வெட்டப்பட்ட பகுதிகளில் மாட்டு சாணத்தை வைத்து மீண்டும் மரம் வளர்வதற்கு வழிவகுத்தனர்,புதிதாக நட்ட மரத்தின் வளர்ச்சியை குத்தாலம் பேரூராட்சி ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
இந்த மரத்தினை நடுவதற்காக பேரூராட்சி ஊழியர்கள் சுமார் 10க்கு மேற்பட்டோர் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


