in

எங்க ஊருக்கு பஸ் விட்டிங்கன்னா உங்களுக்குதான் எங்க ஓட்டு

எங்க ஊருக்கு பஸ் விட்டிங்கன்னா உங்களுக்குதான் எங்க ஓட்டு

எங்க ஊருக்கு பஸ் விட்டிங்கன்னா உங்களுக்குதான் எங்க ஓட்டு வேளாண் துறை அமைச்சரிடம் கோரசாக கோரிக்கை வைத்த பள்ளி மாணவர்கள்.

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இரண்டு மகளிர் விடியல் பயண பேருந்து புதிதாக துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

   

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரும், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகளிர் விடியல் பயண பேருந்தினை கொடியசைத்து துவக்கி வைத்து இனிப்புகள் வழங்கினார்.

அப்பொழுது பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிலையம் வந்த பள்ளி மாணவர்கள் அமைச்சரை கண்டதும் ஓடிவந்து எங்க ஊருக்கு பஸ் விட்டிங்கன்னா உங்களுக்கு தான் எங்க ஓட்டு என மாணவர்கள் கோரசாக கோரிக்கை வைத்தனர்.

பள்ளி மாணவர்களின் கோரிக்கையினை கேட்ட அமைச்சர் உடனே அங்கு இருந்த போக்குவரத்து அதிகாரிகளை கூப்பிட்டு மாணவர்களின் கோரிக்கையினை நாளை முதல் செயல்படுத்துங்கள் என உத்தரவு பிறபித்தார்.

அதனை கேட்ட பள்ளி மாணவர்கள் அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கை குளுக்கினர்.பின்னர் வடலூர் சென்று வள்ளலார் சத்திய ஞானசபையில் சிறிது நேரம் வள்ளலாரை தரிசனம் செய்தார்.

What do you think?

புதுச்சேரியில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலை மாநில அந்தஸ்து

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் திருக்கோவிலில் மாசி தெப்பத்திருவிழா கொடியேற்றம்