என்னை அழிக்க முடியும் நினைத்தால், ஒரு செங்கலை கூட ஆட்ட முடியாது
என்னை அழிக்க முடியும் நினைத்தால், ஒரு செங்கலை கூட ஆட்ட முடியாது,….குபேரா ஆடியோ லாஞ்ச…இல் தனுஷ் பதிலடி
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘குபேரா’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
நடிகர் தனுஷ் தன்னை பற்றி பரவும் வதந்திகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார். எவ்வளவு வேண்டுமானாலும் வதந்திகளை பரப்புங்க எவ்வளவு நெகட்டிவிட்டி வேணும்னாலும் Spread பண்ணுங்க ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆகும் முன்பே என்னை பற்றி நெகட்டிவ் கமெண்ட் பரப்பும் தம்பிகளா கொஞ்சம் தள்ளி போய் விளையாடுங்க ராஜா இங்க இருக்குறவங்க என் ரசிகர்கள் கிடையாது.
23 வருஷமா என் கூடவே வந்த Companions நாலு வதந்திகளை கிளப்பி என்னை காலி பண்ணிடலாம் நினைச்சா அது முட்டாள்தனம் ஒரு செங்கலை கூட ஆட்ட முடியாது உங்களுக்குன்னு இருப்பதை யாரும் எடுத்துக் கொள்ள முடியாது சந்தோஷமாக இருங்கள் சந்தோஷத்தை வெளியில் தேடாதீங்க அது உங்களுக்குள்ளே தான் இருக்கிறது நான் ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்பட்டு இருக்கிறேன்.
இப்பொழுது நல்ல நிலையில் இருக்கிறேன் எந்த நிலையிலும் நான் சந்தோஷமாக தான் இருப்பேன் ஆனால் நான் சந்தோஷத்தை எப்பொழுதும் வெளியில் தேடியது கிடையாது சந்தோஷமான நிம்மதிக்கு மேல் வாழ்க்கை கிடையாது என்று கூறியுள்ளார்.
உரையை’ முடிக்கும் முன், அவர் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார்:
“திருவிழாவுக்குப் பிறகு, தயவுசெய்து பாதுகாப்பாக வீடு திரும்புங்கள். பைக்குகளில் என்னைப் பின்தொடராதீர்கள். நான் அதை ஊக்குவிக்க மாட்டேன்.
என் சொந்த மகிழ்ச்சியை விட உங்கள் பாதுகாப்பு எனக்கு முக்கியம்.”சேகர் கம்முலா இயக்கிய குபேரா படத்தில், ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும், மூத்த நடிகர் நாகார்ஜுனா ஒரு முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்தப் படம், மாதம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஜூன் 20 அன்று வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.