என்னை தப்பா பேசினா பிளாக் செய்துவிடுவேன்
தொகுப்பாளராகவும் நடிப்பிலும் பிஸியாக இருக்கும் அனசுயா பரத்வாஜ், க்ஷணம், ரங்கஸ்தலம், புஷ்பா போன்ற படங்களில்நடித்துள்ளார்.
சமீபத்தில், கிர்ராக் பாய்ஸ் கிலாடி கேர்ள்ஸ் (KIRRAK BOYS KHILADI GIRLS.) நிகழ்ச்சி மூலம் மீண்டும் தொலைக்காட்சிக்குத் திரும்பி இருக்கிறார்.
சமீபத்திய நேர்காணலில், அனசுயா கூறியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
எதிர்மறையான அல்லது புண்படுத்தும் கருத்துக்களை பதிவிடுபவர்களை பிளாக் செய்துவிடுவாராம்.
“இதுவரை சுமார் 30 லட்சம் பேரைத் பிளாக் செய்திருகிராராம். இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் FOLLOWERS …களை மட்டுமே வைத்திருக்கும் போது, 30 லட்சம் பேரை எப்படித் பிளாக் செய்ய முடியும் என்று நெட்டிசன்கள் கலாய்கின்றனர்.
அவர் ஒரு நாளைக்கு நூறு பேரைத் பிளாக் செய்தாலும் எண்ணிக்கை அந்த அளவுக்கு உயராது என்று மீம்ஸ்கள் போட்டு கேலி செய்கின்றனர்.