எந்த துறையையும் நேசித்து செய்தால் வெற்றி கிடைக்கும் அகில உலக கபடி வீரர் பிரபஞ்சன் பள்ளி விளையாட்டு விழாவில் பேச்சு
மயிலாடுதுறை மாவட்டம்,அண்ணா நகரில்,உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 10-ம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.விழாவுக்கு மாவட்ட அடிசனல் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.
விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய அகில உலக கபாடி வீரர் பிரபஞ்சன் பேசும் போது மாணவர்கள் தாங்கள் பங்குபெறும் விளையாட்டை நேசிக்க வேண்டும்.எந்த துறையையும் நேசித்து செய்தால் வெற்றி கிட்டும். மாணவர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் சொல்வதை கேட்டு நடந்தால் வாழ்க்கையில் வெற்றி கிட்டும் என பேசினார்.
யோகா,கபடி, ஒட்ட பந்தயம் ஆகிய போட்டிகளில் மாணவ மாணவிகள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கினர் விழா நிறைவில் பள்ளியின் தலைவர் மோகன்ராஜ் நன்றியுரை ஆற்றினார்.


