என்னுடைய Soulmate…கண்டுபிடித்துவிட்டேன்
ரவி மோகன் மற்றும் ஆர்த்தி விவாகரத்தை அறிவித்த நிலையில் Isari Ganesh மகள் திருமணத்திற்கு ரவி மோகன் கெனிஷா இருவரும் ஜோடியாக வந்தது பல சர்ச்சைகலை எழுப்பிய நிலையில் அதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
ஆர்த்தி யாரும் இனிமேல் என்னை ரவி மோகன் யின் முன்னாள் மனைவி என்று கூற வேண்டாம் என்று பதிவுகள் வெளியிட குஷ்பு, ராதிகா இருவரும் ஆர்த்திக்கு அவருக்கு ஆதரவு தெரிவித்து போஸ்ட் செய்திருக்கின்றனர்.
சர்ச்சைகள் குறித்து தனியார் Youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த கெனிஷா நான் எனது சோல் மேட்டை கண்டுபிடித்து விட்டேன் எனக்கு இரண்டு Soulmate இருக்கிறார்கள் அவர்களில் ஒருவர் பெண் இவர்கள் இரண்டு பேருமே என்னை புரிந்து வைத்திருப்பவர்கள்.
அவர் என்ன செய்தாலும் நானும், நான் என்ன செய்தாலும் அவரும் பொறுத்துக்கொள்வோம், என்னுடைய Soulmate என்னுடைய கண்களை திறந்து இருக்கிறார் பாதுகாப்பு அக்கறை என அனைத்தையும் எனக்கு கொடுத்திருக்கிறார் கஷ்டப்படுத்தாமலும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்கிறார் நான் எப்போ இறப்பேன்னு எனக்கு தெரியாது அதுவரை என்ஜாய் செய்ய வேண்டும்.
என்னைப் பற்றி நெகட்டிவ் கமெண்ட்ஸ் வருவது என்னுடைய பிரச்சனை இல்லை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்தோஷமாக இல்லை எனவே என்னை பார்த்து கோபப்படுகிறீர்கள் நம்முடைய மென்டல் ஹெல்த்தை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் அதை அடுத்த வரிடம் கொடுத்தால் நாஸ்தி ஆகிவிடும் என்று கூறிஇருக்கிறார்.