இனிமேல் நடிக்க முடியுமா தெரியவில்லை.. Samantha
நடிகை சமந்தா டிரா லா லா புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி சுபம் என்ற படத்தை தயாரித்திருக்கிறார்.
மே 9…ஆம் தேதி ரிலீஸ் ஆகும் படத்தின் Pre..Event நிகழ்ச்சி விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற பங்கேற்ற பொழுது உணர்ச்சிகரமாக பேசினார்.
இனிமேல் நான் நடிப்பேன்…னா, என்னால் நடிக்க முடியுமா என்று தெரியவில்லை நான் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறேன் இந்நிறுவனத்தின் மூலம் தரமான படங்களை என்னால் கொடுக்க முடியும் என்று நம்புகிறேன்.
வாழ்க்கையில் ரெஸ்ட் எடுக்க வேண்டிய சூழலுக்கு நாம் தள்ளப்படும் போது ஏதாவது செய்ய வேண்டுமென்று தோன்றும் நான் ரெஸ்ட்..டில் இருந்த போது நிறைய விஷயங்களை யோசித்தேன்.
என்னால் இனிமேல் நடிக்க முடியுமா தெரியவில்லை ஆனால் எனக்கு சினிமாவை தவிர வேறு எதுவும் தெரியாது அப்போது தயாரிப்பாளராக வேண்டும் என்று எண்ணம் எனக்கு தோன்றியது .
15 ஆண்டுகளாக நான் சினிமாவில் இருக்கிறேன் அந்த அனுபவத்தை வைத்து ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறேன்.
ஒரு நடிகையாக நான் கற்றுக் கொண்டதை விட தயாரிப்பாளராக நிறைய விஷயங்களை கற்றுக் கொள்கிறேன் என்று கூறினார் Samantha.