சிரஞ்சீவியுடன் நடிக்க இத்தனை கோடியா
தெலுங்கு சினிமா வரலாற்றில் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றான சங்கராந்திகி வாஸ்துன்னம் படத்தை இயக்குனர் அனில் ரவிபுடி வழங்கினார்.
இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 300 கோடிக்கு மேல் வசூல் செய்தது. அந்த உற்சாகத்தில், மெகா ஸ்டார் சிரஞ்சீவியை வைத்து இன்னொரு பெரிய படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகை நயன்தாரா தற்போது ஒரு படத்திற்கு 12 கோடி ரூபாய் சம்பளமாக பெற்று வருகிறார்.
திருமணத்திற்கு பிறகு அவர் நடித்த படங்கள் அனைத்தும் பிளாப் ஆனாலும் சம்பளத்தை மட்டும் உயர்த்தி கொண்டே இருக்கிறார்.
நயன்தாராவை தெலுங்கு படத்தில் சிரஞ்சீவி..இக்கு ஜோடியா நடிக்க அணுகிய போது 18 கோடி ரூபாய் சம்பளம் கேட்டு அதிர்ச்சி கொடுத்தார். அதனால் தயாரிப்பாளர் வேறு ஹீரோயினுக்கு வலைவீசி வருகிறார்.