in

“நாயையும் மனுஷனையும் (ஆண்களையும்) எப்படி ஒப்பிடலாம்?

“நாயையும் மனுஷனையும் (ஆண்களையும்) எப்படி ஒப்பிடலாம்?

 

தெருநாய்கள் தொல்லை பத்தி ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்துல விசாரணைக்கு வந்தது. அப்போ நீதிபதிகள் சில முக்கியமான கருத்துகளைச் சொன்னாங்க:

“நாய் எப்போ கடிக்கும், எப்போ கடிக்காதுன்னு யாராலயும் கணிக்க முடியாது. அதுங்க மனநிலையை நம்மால படிக்க முடியாது.” “அதனால, ஸ்கூல், ஆஸ்பத்திரி மாதிரி பொது இடங்களை ‘நாய்கள் இல்லாத இடங்களா’ மாத்தணும். வருமுன் காப்பதே சிறந்தது,” அப்படின்னு நீதிபதிகள் சொன்னாங்க.

விலங்கு நல ஆர்வலரான நடிகை திவ்யா ஸ்பந்தனா, கோர்ட்டோட இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிச்சு இன்ஸ்டாகிராம்ல ஒரு பதிவை போட்டிருக்காங்க.

அதுல அவங்க கேட்ட கேள்வி தான் இப்போ சர்ச்சையாகியிருக்கு:
“நாய்களைக் கணிக்க முடியாதுன்னு சொல்றீங்க.. ஆனா, ஓர் ஆண் எப்போ ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்வான் இல்ல கொலை செய்வான்னு யாருக்காவது தெரியுமா? அதுக்காக எல்லா ஆண்களையும் முன்னாடியே கொண்டு போய் ஜெயில்ல அடைக்க முடியுமா?”

திவ்யாவோட இந்த போஸ்ட்டைப் பார்த்த நெட்டிசன்கள் ரெண்டா பிரிஞ்சு சண்டை போட்டுக்குறாங்க: “நாயையும் மனுஷனையும் (ஆண்களையும்) எப்படி ஒப்பிடலாம்? இது ரொம்பத் தப்பான உதாரணம்”னு திட்டிட்டு இருக்காங்க.

“அவங்க சொல்ல வர்ற பாயிண்ட் – ‘கணிக்க முடியாது’ங்கிற காரணத்துக்காக ஒரு உயிரினத்தையே பொது இடங்கள்ல இருந்து ஒதுக்குறது தப்புங்கிறது தான்”னு சப்போர்ட் பண்றாங்க.

What do you think?

‘பராசக்தி’ 23 கட் போடச் சொன்ன தணிக்கைக் குழு

பராசக்தி’ படத்துக்கு ஒரு வழியா ‘க்ரீன் சிக்னல்