in

HIT 3…. தியேட்டரில் ஹிட் ஆகுமா? கொடூரத்தின் உச்சம்.. HIT 3 Movie Review


Watch – YouTube Click

HIT 3…. தியேட்டரில் ஹிட் ஆகுமா? கொடூரத்தின் உச்சம்.. HIT 3 Movie Review

சைலேஷ் கோலானு இயக்கிய HIT 3 நேற்று ரிலீஸ் ஆனது. நானி, ஸ்ரீநிதி ஷெட்டி, ராவ் ரமேஷ், சமுத்திரக்கனி, கோமலி பிரசாத், அதிவி சேஷ் மற்றும் பலர் நடித்திருக்கும் HIT 3..ஹிட்..டுக்கு உண்டான சமாச்சாரங்கள் படத்தில் இருகிறதா என்பதை பார்போம்.நானி வழக்கமான Commercial Story...ரை தாண்டி கொடுரமான போலீஸ் அதிகாரியாக நடித்திருகிறார்.

கொலைக் குற்றச்சாட்டில் விசாரணையில் இருக்கும் அர்ஜுன் சர்க்கார் (நானி), மற்றொரு குற்றவாளியிடம் தான் சிறையில் அடைக்கப்பட்டதற்கான காரணத்தை விவரிக்கிறார்.

இந்த ஃப்ளாஷ்பேக்கில், இருந்து ஆரம்பிகிறது கதை, அர்ஜுன் சர்கார் (நானி) ஒரு கொடூரமான கொலையைச் செய்யும் ஒரு இரக்கமற்ற போலீஸ்காரர். ஜம்மு காஷ்மீரில் இன்வெஸ்டிகேஷன் காவல்துறை அதிகாரியாக இருக்கும் நானி பல்வேறு இடங்களில் வெவ்வேறு கொலைகள் ஒரே மாதிரியாக நடப்பதை கண்டுபிடிக்கிறார்.

அப்பாவி மக்களை கொலை செய்வதற்கு காரணம் என்ன? இந்தக் கொலைகளுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்? அர்ஜுன் கொலையாலியை கண்டுபிடித்தாரா? அவர் ஏன் இவ்வளவு இரக்கமற்றவராக இருக்கிறார், பின்னணி என்ன? பதில்களை அறிய, படத்தை திரையில் பாருங்கள். HIT3-யின் சென்டர் of attraction நானி என்பதில் சந்தேகமில்லை.

அவரது புதிய அதிரடி தோற்றம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும். நடிப்பிலும் சரி, வசன உச்சரிப்பாக சரி, நானி பிண்றாரு. ஒவ்வொரு படத்திலும், நானி சிறப்பாக நடிப்பார், இந்த படத்திலும் குறை வைக்காமல் நடித்திருக்கிறார். ஸ்ரீநிதி ஷெட்டி ..இக்கு படத்தில் வேலை இல்லை நானிக்கும் ஸ்ரீநிதி ..இக்கும் கெமிஸ்ட்ரி பற்றாக்குறை.

பிரதிக் பப்பர் வில்லனாக நடிக்க போராடுகிறார், HIT 3 மைனஸ்: சந்தேகத்திற்கு இடமின்றி இது Adult Movie , Family Audience…இக்கு ஏற்றதல்ல. பலவினமானவர்கள் படத்தை தவிர்ப்பது நல்லது படத்தில் இவ்வளவு வன்முறையைக் காட்ட வேண்டிய அவசியமில்லை என்ற உணர்வு ஏற்படுகிறது.

சில காட்சிகள் கொடூரம். மிக்கி ஜே மேயர் இசையமைத்துள்ளார், அவருடைய இசை சிறப்பாக உள்ளது. ஆனால் முதல் பாதியில் பின்னணி இசை இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம் என்ற எண்ணம் ஏற்படுகிறது.

வசனங்கள் Over Sound …டாக இருந்தாலும் பாடல்கள் ஓகே. இயக்குனர் சைலேஷ் கொலானு அற்புதமான த்ரில்லர் Story ..யை மந்தமாக கொடுத்திருகிறார். இன்னும் அதிரடி திருப்பங்கலுடன், வில்லனின் கதாபத்திரம் வலிமையாக இருந்திருதால் சிறப்பாக இருந்திருக்கும்.

இரத்தக்களரியை தவிர்த்து பார்த்தால் ஆக்‌ஷன் படப் பிரியர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவமாக இருக்கும். முயற்சி செய்து பாருங்கள். HIT 3 பரபரப்பான சர்வைவல் த்ரில்லர்.


Watch – YouTube Click

What do you think?

சின்னத்திரை நடிகை அமுதா தற்கொலைக்கு முயற்சியா?

டூரிஸ்ட் Family ” படம் அல்ல, ஒரு அனுபவம்… நிச்சயம் பார்க்க வேண்டிய படம்…நம்பி தியேட்டருக்கு செல்லலாம்