கும்பகோணத்தில் அகில பாரத இந்து மகா சபா சார்பில் இந்து விழிப்புணர்வு
கும்பகோணத்தில் அகில பாரத இந்து மகா சபா சார்பில் இந்து விழிப்புணர்வு யாத்திரை நிகழ்ச்சியில் சுவாமி சக்கரபாணி மஹாராஜா, கலந்து கொண்டு மகாமக திருவிழாவை தேசிய திருவிழாவாக அறிவிக்க பிரதமர் மோடி, அமித்ஷாவுடன் வலியுறுத்துவோம் என்று பேட்டி.
கும்பகோணத்தில் அகில பாரத இந்து மகா சபா சார்பில் இந்து சுவாமியின் யாத்ரா இந்து விழிப்புணர்வு யாத்திரை நிகழ்ச்சி மகாமக குளத்தில் நடைபெற்றது. இதில் சனாதன் சாம்ராட் சுவாமி சக்கரபாணி ஜி மஹராஜ், தேசிய துணை தலைவரும் தமிழக தலைவருமான பாலசுப்பிரமணியன், சந்த் மகா சபா தேசிய செயலாளரும் தமிழக தலைவர் சுவாமி ஸ்ரீராம் சித்ரகுப்த ஜி மகராஜ் ஆகியோருக்கு மாலை அணிவித்து கிரீடம் வைத்து நாதஸ்வரம் மேளதலத்துடன் வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து மகாமக குளத்தில் இருந்து ஊர்வலமாக வந்து காசி விஸ்வநாதன் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சனாதன் சாம்ராட் சுவாமி சக்கரபாணி ஜி மஹராஜ், தேசிய துணை தலைவரும் தமிழக தலைவருமான பாலசுப்பிரமணியன், பத்திரிகையாளர்கள் சந்தித்து பேட்டி அளித்த போது இந்துக்கள் அனைவரும் அமைதியா இருக்கணும் ஆனந்தமாக இருக்கணும் அரசாங்கத்திற்கு வலு சேர்க்கணும் பயங்கரவாத தன்மைகளாம் ஒளியினும் இதற்காக ஒவ்வொரு திருக்கோவிலூர் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறோம். காசி விஸ்வநாதர் திருக்கோவில் தரிசனம் செய்வது பெருமையாக நினைக்கிறோம்.

மகாமக கும்பமேளாவை உலகம் பூரா கொண்டு போக நாங்க ஆசைப்படறோம் மகாமக திருவிழா கும்பமேளாவை பற்றி உலகம் பூரா தெரிஞ்சுக்கணும் மகாமக குளத்தில் கங்கா, யமுனா, சரஸ்வதி புனிதம் மகாமக குளத்தில் உள்ளது. அதற்காக நாங்கள் பெருமை அடைகிறோம் மகாமக திருவிழா கும்பமேளாவே தேசிய திருவிழாவாக அறிவிக்க பிரதமர் மோடி, மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து மகாமக திருவிழாவை உலக அளவில் கொண்டு சேருவதற்கு இந்து மகா சபா அனைத்து முயற்சிகளும் எடுக்கும் என்று தெரிவித்தனர். இதில் மாநில பொதுச் செயலாளர் ராம நிரஞ்சன், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


