திருவண்ணாமலை நகரில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கிய கன மழை…..
திருவண்ணாமலை நகரத்தில் சுமார் அரை மணி நேரம் இடி மின்னலுடன் கன மழை வெளுத்து வாங்கியது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகளவு இருந்து வருகிறது. அவ்வப்போது மாவட்டத்தின் சில பகுதிகளில் இரவு நேரத்தில் மிதமான மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் காலை முதலே வெயிலின் தாக்கம் இருந்தது. தற்போது இரவு நேரம் தொடங்கிய பின்னர் மின்னல் வெட்ட தொடங்கியது. இதனை தொடர்ந்து லேசான மழை பொழிய தொடங்கி பின்னர் இடி மின்னலுடன் கன மழை வெளுத்து வாங்கியது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, போளூர், கலசபாக்கம், அத்திமூர், ஜவ்வாது மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


