மயிலாடுதுறையில் இடி மின்னல் உடன் பெய்த பலத்த மழை
மயிலாடுதுறை மாவட்டத்தில் இடி மின்னல் உடன் பெய்த பலத்த மழை, சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்.
வெப்ப சலனம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இன்று பிற்பகல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
மயிலாடுதுறை செம்பனார்கோயில், ஆக்கூர், நீடூர் மங்கைநல்லூர், பட்டவர்த்தி மணல்மேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் திடீரென்று கருமேகங்கள் சூழ்ந்து, மழை பெய்தது.
குறுகிய நேரத்தில் அதிக அளவு பெய்த மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியது, தாழ்வான பகுதிகளை நோக்கி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதன் காரணமாக வெப்பமான சூழ்நிலை மறைந்து குளிர்ச்சியான சுற்றுச்சூழல் ஏற்பட்டது.


