நிலக்கரி வெட்டி எடுக்கும் ராஜச இயந்திரங்கள் சாலையின் குறுக்கே சென்று கடுமையான போக்குவரத்து பாதிப்பு
நெய்வேலி என் எல் சி நிறுவனத்தின் முதல் சுரங்கம் முதல் சுரங்க விரிவாக்கம் இரண்டாவது சுரங்கம் என மூன்று திறந்தவெளி சுரங்கள் மூலம் நிலக்கரி வெட்டி எடுத்து மின் உற்பத்தி செய்து வருகின்றனர் .

இந்தநிறுவனத்தின் நிலக்கரி வெட்டி எடுக்கவும் மேல் மண் நீக்கம் செய்வதற்காக பல கோடி ரூபாய் மதிப்பில் உள்ள ராட்சச இயந்திரம் முதல் சுரங்க பகுதிகளில் இருந்த இரண்டாவது சுரங்கத்திற்கு என் எல் சி நிர்வாகம் எடுத்துச் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் ரயில்வே பாதை மற்றும் போக்குவரத்து பாதையை கடந்து சென்று வருகின்றனர் இதனால் ரயில்வே நிர்வாகத்தினர் இடம் ஒப்புதல் வாங்கி மின் ஒயர்களை கழட்டி விட்டு சென்று .சாலையின் குறுக்கே திடீரென சென்றதால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
நிலக்கரி வெட்டி எடுக்கும் ராட்சச இயந்திரம் சாலையின் குறுக்கே சென்றதால் விருத்தாச்சலம் கடலூர் சாலையில் ஒரு மணி நேரம் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


