in

மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.45 கோடியே 50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கூடுதல் கட்டடத்தை திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.45 கோடியே 50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கூடுதல் கட்டடத்தை திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.45 கோடியே 50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கூடுதல் கட்டடத்தை திறந்து வைத்த நிகழ்ச்சியில்,மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த்.பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் கலந்து கொண்டு .குத்து விளக்கேற்றி வைத்து பார்வையிட்டனர்.


இன்று மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ.45  கோடியே 50 இலட்சம் மதிப்பீட்டில் 10425.37 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள தரை தளம் மற்றும் 7 மேல்தளங்களுடன் கூடிய கூடுதல் கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த கட்டிடத்தில் ஆய்வகம், குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, சிறிய அறுவை சிகிச்சை அரங்கம், பணி செவிலியர் அறை, மருத்துவர் அறை, மின்சார அறை, இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை, பொது அறுவை சிகிச்சை அறை,புறநோயாளிகள் அறை, தீவிர சிகிச்சை பிரிவு,பொது மருத்துவம்,பெண்கள், உள் நோயாளிகள் பிரிவு,முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அலுவலகம் உள்ளிட்ட அனைத்து கூடுதல் வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) கோகுல் மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி, மயிலாடுதுறை நகர்மன்றத் தலைவர் செல்வராஜ், சுகாதாரத்துறை இணை இயக்குனர் பானுமதி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கவிதா, சுகாதாரத்துறை துணை இயக்குநர் அஜீத் பிரபுகுமார், முதன்மை குடிமை மருத்துவ அலுவலர் மருதவாணன், மயிலாடுதுறை நகர்மன்றத் துணை தலைவர் சிவக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள்,உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

What do you think?

கிழக்கு ரோட்டரி சங்கம், மலர் மல்டி ஸ்பெஷலிஸ்ட், விஷ்ணு மெடிக்கல் சென்டர் நடத்தும் வழக்கறிஞர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

மன அழுத்தம் இல்லாமல் நேர்மறை சிந்தனையோடு விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வது போன்று மாணவர்கள் தேர்வை சந்திக்க வேண்டும்  ஆளுநர் கைலாசநாதன் அறிவுறுத்தியுள்ளார்