தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் அரசியல்வாதியாக இருக்கிறார் எச்.ராஜா- தொல்.திருமாவளவன் பேட்டி
தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் அரசியல்வாதியாக இருக்கிறார் எச்.ராஜா என்றும்-இடதுசாரி ஆதரவாளராக இருந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வலதுசாரி ஆதரவாக கருத்துகளை கூறுவது அதிர்ச்சி அளிப்பதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் செஞ்சியில் பேட்டி.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த தென்புதுப்பட்டு கிராமத்தில் விசிக நிர்வாகியான சின்னப்பன்(எ)ரூபன்- சிவரஞ்சனி என்பவரின் புதிய குடில் திறப்பு விழாவிற்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர். தொல் திருமாவளவன் புதிய இல்லத்தை திறந்து வைத்து குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தொல். திருமாவளவன் அவர்கள் தமிழ்நாட்டு அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தும் அரசியல்வாதியாக எச்.ராஜா இருப்பதாகவும்,அவரிடம் மாநில அரசியல் புரிதலும் தேசிய அரசியல் புரிதலும் இல்லாமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் தலித்தாக இருந்து பார்த்தால் மட்டுமே சனாதான கருதியல் என்னவென்று எச்.ராஜாவுக்கு தெரியும் என்றும் ,தமிழ்நாட்டில் நடக்கும் ஆணவ பதிவுகளுக்கு திமுக தான் காரணம் என்றால் பாஜக ஆளும் மாநிலங்களில் நடைபெறும் ஆணவ படுகொலைக்கு யார் காரணம் என தொல் திருமாவளவன் எச் ராஜாவிற்கு கேள்வி எழுப்பினார்.
அரசியல் ஆதாயம் தேடுவதற்கு எச் ராஜா என்ன வேண்டும் என்றாலும் பேசுவார் என கூறினார்.
மேலும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி இடதுசாரி ஆதரவாளராக இருந்த நிலையில் தற்போது வலது சாரி ஆதரவாளராக கருத்து தெரிவிப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் செஞ்சி பகுதியில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலையை மீண்டும் நிறுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், செஞ்சிக்கோட்டையை மராத்திய மன்னர்கள் ஆட்சி செய்ததாக பெயர் மாற்றம் செய்யப்படுவதாக இருந்த புகார் கொடுத்து பேசிய அவர் அது பற்றியும் முழுமையான விவரம் தெரியவில்லை என்றும் ஆனால் வரலாற்றை மாற்றி கூறுவது தான் பாஜகவின் வேலை என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் தனஞ்செழியன், ஆரணி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் வழக்கறிஞர் நன்மாறன்,செஞ்சி நகர செயலாளர் செஞ்சி சிவா, மாநில துணை செயலாளர் துரைவளவன்,மாவட்ட துணை அமைப்பாளர்கள் செஞ்சி அரசு, மா.க.வெங்கடேசன், காரை நாகசாமி, ஒன்றிய செயலாளர் ராசாராமன், அனந்தபுரம் நகர செயலாளர் காத்தமுத்து, நகர பொருளாளர் வழக்கறிஞர் காமராஜ் உள்ளிட்ட விசிக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


