மரகதவல்லி அம்பாள் உடனுறை கருணைபுரீஸ்வரர் சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த கழுக்காணிமுட்டம் கிராமத்தில் அமைந்துள்ள மரகதவல்லி அம்பாள் உடனுறை கருணைபுரீஸ்வரர் சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது .
முன்னதாக கடந்த 14 ஆம் தேதி முதற்கால யாகசால பூஜை தொடங்கியது.அதனை தொடர்ந்து இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவுற்று பூரணாஹூதி செய்விக்கபட்டு மஹா தீபாராதனை காட்டப்பட்டது.

சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்களை சுமந்து வேத மந்திரங்கள் ஓத மேளதாள வாத்தியங்களோடு கோவிலை சுற்றி வளம் வந்து விமான கும்பத்தை அடைந்தனர் .
பின்னர் புனித நீர் கோபுர கலசங்கள் மீது ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


