மன அழுத்தம் இல்லாமல் நேர்மறை சிந்தனையோடு விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வது போன்று மாணவர்கள் தேர்வை சந்திக்க வேண்டும் ஆளுநர் கைலாசநாதன் அறிவுறுத்தியுள்ளார்
பிரதமர் நரேந்திர மோடி, தேர்வுகளைப் பற்றி மாணவர்களுடன் கலந்துரையாடும் ‘பரிக்ஷா பே சர்ச்சா’ 2026 – நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி, பள்ளிக் கல்வித்துறையின் சமகர சிக்ஷா இயக்கம் சார்பில் கம்பன் கலையரங்கத்தில் இன்று நடைபெற்றது.
துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பிரதமர் மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியை கண்டுகளித்தார்.
நிகழ்ச்சியின்போது பிரதமருடன் நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இந்த ஆண்டு பங்கு பெற்ற கலிதீர்த்தாள்குப்பம், கலைஞர் கருணாநிதி அரசு மேல்நிலைப் பள்ளியின் மாணவி கீர்த்தனா, கடந்த ஆண்டு நிகழ்ச்சியில் கலந்து

கொண்ட காரைக்கால் காவேரி பப்ளிக் பள்ளி மாணவி கிருத்திகா சங்கர் இருவரையும் மேடைக்கு அழைத்து சிறப்பித்தார்.
அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய துணைநிலை ஆளுநர் கைலாசநாதன்…
தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்று மாணவர்கள் முயற்சி செய்யும்போது மன அழுத்தம் ஏற்படுகிறது, தேர்வுகளை பயம் இல்லாமல் மன உறுதியோடு விளையாட்டு போட்டியில் கலந்து கொள்வது போன்று தேர்வை சந்திக்க வேண்டும் என்றார்.
மன அழுத்தம் இல்லாமல் நேர்மறை சிந்தனை உடன் தேர்வு எழுத வேண்டும் நேரத்தை திட்டமிட்டு பயன்படுத்த வேண்டும் சில நேரங்களில் நாம் எதிர்பார்க்கும் மதிப்பெண் வராமல் கூட போகலாம் அப்படி இருக்கும் பட்சத்தில் தோல்வியிலிருந்து நாம் எப்படி முன்னேறி செல்வது என்பதனை குறித்து யோசிக்க வேண்டும்.
படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை வேறு முக்கிய அம்சங்கள் இருக்கிறது சரியான உணவு, தேவையான தூக்கம், உடற்பயிற்சி, யோகா, செய்வதன் மூலம் உடலையும் மனதையும் சம நிலையில் வைக்க வேண்டும்.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தலைவர் செல்வம், மாண்புமிகு கல்வி அமைச்சர் நமச்சிவாயம், கல்வித்துறைச் செயலர் கிருஷ்ண மோகன் உப்பு, இயக்குனர் சிவக்குமார், இணை இயக்குனர் சிவகாமி, சமகர சிக்ஷா இயக்க பொறுப்பாளர் எழில்கல்பனா உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.
மேடைப்பேச்சு: கைலாசநாதன் துணைநிலை ஆளுநர் புதுச்சேரி.


