மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை செவிலியர்கள் திடீர் போராட்டம்
தொடர்ந்து இரவு பணி வழங்குவதாகவும் பரிந்துரையில் வருபவர்களுக்கு இரவு பணி வழங்கவில்லை எனவும் குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டம். சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ளது கடலூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இந்த மருத்துவமனையில் 300-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு சுழற்சி முறையில் இரவு பகல் பணி வழங்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக மருத்துவமனை மருத்துவக் கல்லூரி பணிபுரியும் செவிலியர்களுக்கு நியாயமான பணி வழங்காமல்.
அரசியல்வாதிகளின் பரிந்துரையின் பெயரில் வரும் செவிலியர்களுக்கு பகல் நேர பணியும், மற்ற செவிலியர்களுக்கு இரவு நேரத்தில் தொடர்ந்து பணி செய்ய மருத்துவக் கல்லூரி மருத்துவ நிர்வாகம் வற்புறுத்தி வருவதாக குற்றம் சாட்டும் செவிலியர்கள்.
மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக அனைவருக்கும் பணியை பகிர்ந்து கொடுக்க வேண்டுமென 70-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் திடீரென மருத்துவ கண்காணிப்பாளர் அரையின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களிடம் மருத்துவமனை நிர்வாகம் தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட வருகின்றனர்.


