நடிகரான குட் டே தயாரிப்பாளர்
குட் டே என்ற படத்தை தயாரித்த பிரித்விராஜ் தற்பொழுது நடிகராக அறிமுகம் ஆகி உள்ளார்.
இப்படத்தில் காளி வெங்கட், மைனா நந்தினி, வேலராமமூர்த்தி, போஸ் வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் பட விழாவில் பிரித்விராஜ் பேசுகையில் நண்பர்களுக்குள் உரையாடிய விஷயம் தான் இன்றைக்கு குட் டே படமாக உருவாகியுள்ளது.
படம் பாதி முடிந்துவிட்ட நிலையில் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லை ஆனால் படம் முழுமை அடைய வேண்டும் என்பதற்காக சம்பளத்தை எதிர்பார்க்காம நடிகர்கள் நடித்து ஒத்துழைப்பு கொடுத்தனர்.
சினிமாவில் இப்படிப்பட்ட கலைஞர்கள் கிடைப்பது அரிது அவர்களின் பாதம் தொட்டு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தயாரிப்பாளராக இருந்த நான் ஏன் நடிகராக அறிமுகமானேன் என்று கேட்கிறார்கள். தயாரிப்பாளர்கள் ஏன் நடிகர்கள் ஆகக்கூடாது திறமை இருக்கும் கலைஞர்களுக்கு சினிமாவில் நிச்சயம் இடம் உண்டு.
சினிமா கனவுகள் நிறைந்த கலை சோதனை பயணம் தான் நாங்களும் இந்த பயணத்தில் இணைந்து இருக்கிறோம் ரசிகர்கள் நிச்சயம் ஆதரவு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில்.