ஆட்டோவில் தவறவிட்ட 5 லட்சம் மதிப்பிலான தங்க, வெள்ளி நகை, 4 ஆயிரம் ரூபாய் பணம்
அம்பத்தூர் விஜயலட்சுமிபுரத்தில் வசித்து வருபவர் ஆட்டோ ஓட்டுனர் பரமசிவம் (67) கடந்த 45 வருடங்களாக ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று அம்பத்தூர் பேருந்து நிலையம் அருகே அம்பத்தூர் சண்முகபுரத்தை சேர்ந்தவர் சரண்யாவை இருவரை சவாரி ஏற்றுக்கொண்டு ஆவடியில் இறுக்கி விட்டு வழக்கம் போல பணியை தொடர்ந்து உள்ளார்.

ஆவடியில் இறக்கிவிட்டு மீண்டும் அம்பத்தூர் வரும் வழியில் ஆட்டோவின் உள் பை தவற விட்டு இருப்பதை கண்டு அதை திறந்து பார்க்கையில் 4.5 சவரன் தங்க நகை, 2 ஜோடி வெள்ளி கொலுசு, 4 ஆயிரம் ரூபாய் மற்றும் 2 கை கடிகாரம் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆட்டோ ஓட்டுநர் உடனடியாக அம்பத்தூர் உதவி ஆணையர் ஜான் டி ரூபனிடம் அலுவலகத்தில் நடந்தவற்றைக் கூறி பையுடன் தங்க, வெள்ளி நகைகள் மற்றும் கை கடிகாரம், ரொக்க பணத்தையும் கொடுத்துள்ளார்.
பெற்றுக் கொண்ட உதவி ஆணையர் நகை காணாமல் போனது தொடர்பாக புகார் பெறப்பட்டுள்ளதா என காவல்நிலையத்தில் கேட்டு அறிந்து புகார் கொடுத்தவர்களை கொரட்டூர் அழைத்து செங்குன்றம் துணை ஆணையர் பாலாஜி முன்னிலையில் தங்க, வெள்ளி நகைகள் மற்றும் ரொக்க பணம் ஆகியவற்றை சரிபார்த்து உரியவரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் நேர்மையாக செயல்பட்டு தவறவிட்ட நகை மற்றும் பணத்தை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு தெரிவித்து ஊக்கத்தொகையும் வழங்கினர். இச்சம்பவத்தை பார்த்த தூய்மை பணியாளர்களும் ஆட்டோ ஓட்டுனரின் நேர்மையை பாராட்டினர்.


