in

தசரா பண்டிகைக்கு அம்மன் சிலை அமைத்து பூஜைகள் செய்து வழிபாடு

தசரா பண்டிகைக்கு அம்மன் சிலை அமைத்து பூஜைகள் செய்து வழிபாடு

 

மதுரையில் இந்து ராஷ்டிர சபா சார்பில் தசரா பண்டிகைக்கு அம்மன் சிலை அமைத்து பூஜைகள் செய்து வழிபாடு நடத்த அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் இந்து ராஷ்டிர சபா சார்பில் மேகராஜ்பாண்டியன் தலைமையில் மாவட்டத் தலைவர் கிருஷ்ணகுமார் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் தசரா பண்டிகை அம்மன் சிலை அமைத்து பூஜை செய்து வழிபாடு நடத்த அனுமதி வழங்க கோரி மனு அளித்தனர்.

பின்னர் அவர் கூறும் போது இந்து ராஷ்டிர சபா மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் கூறியது தமிழகம் முழுவதும் எங்களது அமைப்பின் சார்பில் தசரா பண்டிகை அம்மன் சிலை அமைத்து பூஜைகள் செய்து வழிபாடு நடத்த உள்ளம் அதன் ஒரு பகுதியாக மதுரையில் முதல் முறையாக பெத்தானியாபுரம் அண்ணா மெயின் வீதியில் ஒன்பது நாட்கள் நடைபெறும்.

தசரா பண்டிகை அம்மன் சிலை அமைத்து தினசரி பூஜைகள் செய்து வழிபட அனுமதி வேண்டியும் பத்தாவது நாள் அதிகாலையில் அம்மன் சிலையை வைகையில் கரைத்து விட அனுமதி வேண்டியும் மனு அளித்துள்ளோம் என்று அவர் கூறினார்.

What do you think?

சிதம்பரத்தில் பாச கயிறுடன் சாலைக்கு வந்த எமதர்மராஜா

ஸ்ரீ நடேசா நாட்டிய கலைக்கூட பயிற்சி மையம் சார்பில் அரங்கேற்றம் மற்றும் சலங்கை பூஜை