தோரணமலையில் புரட்டாசி பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலம் கூட்டு பிரார்த்தனை
தென்காசி மாவட்டம் தோரணமலையில் புரட்டாசி பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலம் மற்றும் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ளது தோரணமலை ஸ்ரீ முருகன் கோவில் சித்தர்களும் முனிவர்களும் வழிபடப்பட்ட இக்கோவிலில் மாதாமாதம் பௌர்ணமி தோறும் கிரிவலம் நடப்பது வழக்கம் புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலம் நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுமார் 6.30 கிலோமீட்டர் தூரம் உள்ள கிரிவல பாதையில் முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் கிரிவலம் வந்தனர்.

பின்பு உலக நன்மைக்காக பக்தர்கள் இணைந்து கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது காலை மதியம் அன்னதானம் நடைபெற்றது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


