நெல்லை பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் வியாபாரிகள் தொடர் கடையடைப்பு
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டி முடிக்கப்பட்டு முதல்வரால் திறக்கப்பட்டு 4 மாதங்கள் கடந்தும் கடை ஒதுக்கீடு செய்யாமல் இருப்பதை கைவிட்டு உடனடியாக கடை வழங்க தமிழக அரசை வலியுறுத்தி வரும் 30ம் தேதி முதல் நெல்லை பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் வியாபாரிகள் தொடர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு.
மார்க்கெட்டில் உள்ள 540 கடைகளின் உரிமையாளர்களின் குடும்பத்தினர்,கடை ஊழியர்கள், வியாபாரம் சார்ந்த தொழிலாளர்கள் என 5000 மேற்பட்டோர் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மார்க்கெட் வளாகத்தில் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவிப்பு.
நெல்லை பாளையங்கோட்டையில் அமைந்துள்ள காந்தி மார்க்கெட் 2020 ஆம் ஆண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இடித்து அகற்றப்பட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது 540 கடை வியாபாரிகள் ஏற்கனவே அங்கு கடை நடத்தி வந்த நிலையில் மீண்டும் அவர்களுக்கே அங்கு கடை ஒதுக்க வேண்டும் என பல்வேறு போராட்டங்கள் நடத்தி அதன் பின்னரே கடைகள் காலி செய்யப்பட்டது அதற்கு மாநகராட்சி ஒப்புதல் தெரிவித்து வியாபாரிகள் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்து விதமான பணிகளும் முடிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் ஆறாம் தேதி தமிழக முதலமைச்சர் நேரடியாக வருகை தந்து மார்க்கெட்டை திறந்து வைத்தார்.
தற்போது கடை ஒதுக்கீடு சம்பந்தமான எந்த விதமான பேச்சுவார்த்தை நடைபெறாமல் தடைகள் திறக்கப்படாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உள்ளாட்சி மன்ற கடைகளில் வணிகம் செய்து வரும் வணிகர்களின் நலன் கருதி வெளியிடப்பட்ட அரசாணை எண் 66 இன் படி கடைகள் ஒதுக்கீடு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பாளையங்கோட்டை மார்க்கெட் வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்ஆனால் அந்த அரசாணைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஆனால் மாநகராட்சி தரப்பில் முறையாக ஆஜராகாமல் இருந்த நிலையில் சம்பந்தப்பட்ட அரசாணை மீது தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் கடைகளை ஏலம் நடத்த வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப் போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது ஏற்கனவே கடை வைக்கப்பட்ட அவர்களுக்கு கடை ஒதுக்க வேண்டும் ஏலம் நடைமுறையை அமல்படுத்தாமல் அரசாணை 66 ன் படி கடைகளை ஒதுக்குவதற்கான நடைமுறை மேற்கொள்வதற்கு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் வியாபாரிகள் ஐக்கிய சங்கத்தின் தலைவர் சாலமோன் தலைமையில் பாளையங்கோட்டை மார்க்கெட் வளாகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட வியாபாரிகள் 500க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து கலந்து கொண்டனர் ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது அதனை தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அதில் பொது ஏலத்திற்கு கடைகள் விடுவதை தடுத்து பழைய நடைமுறையை பின்பற்றி 540 வியாபாரிகளுக்கும் கடை ஒதுக்க வேண்டும் நீதிமன்றத்தில் உள்ள தடையை ரத்து செய்ய மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் திங்கட்கிழமை முதல் தொடர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக வியாபாரிகள் முடிவு செய்தனர்.
மேலும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வியாபாரிகளின் குடும்பத்தினர் ஊழியர்கள் மற்றும் வியாபாரம் சார்ந்த தொழிலாளர்கள் என 5000க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி காந்தி மார்க்கெட் பலாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி தடை உத்தரவை ரத்து செய்வதற்கு மேல் முறையீடு உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து செயற்குழு கூட்டி முடிவு எடுப்பது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாநகராட்சி காந்தி மார்க்கெட் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டி திறக்கப்பட்ட நிலையிலும் நான்கு மாதங்களை கடந்தும் கலை ஒதுக்கப்படாமல் இருந்து வரும் சூழலில் தொடர் கடையடைப்பு மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் வியாபாரிகள் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


