in

பிள்ளையார்பட்டியில் கஜமுக சூரசம்ஹாரம்

பிள்ளையார்பட்டியில் கஜமுக சூரசம்ஹாரம்

 

பிள்ளையார்பட்டியில் கஜமுக சூரசம்ஹாரம்: விநாயகர் உடன் போர் புரிய கையில் வேலுடன் சுற்றி சுற்றி வலம் வந்து மிரட்டிய கஜமுகன், திரளான பக்தர்கள் முன்னிலையில் தனது வலது தந்தத்தை கையில் எடுத்து வதம் செய்த கற்பகவிநாயகர்!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அமைந்துள்ள, உலகப் பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் கோயிலில் கஜமுக சூரசம்ஹாரம் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.

இக்கோயில் சதுர்த்தி விழா கடந்த 18 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று நடைபெற்ற கஜமுக சூரசம்ஹாரம் விழாவை முன்னிட்டு திருநாள் மண்டபத்தில் வெள்ளி யானை வாகனத்தில் உற்சவர் விநாயகர் வாள், வில், அம்பு, ஆகியவற்றுடன் எழுந்தருளினார்.

அங்கு அவருக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து யானை தந்தத்துடன் எழுந்தருளிய கற்பக விநாயகர் மேள தாளங்களுடன் கிழக்கு கோபுரம் வழியாக திருவீதியை சூரனுடன் சுற்றி தெப்பக்குளத்தை வலம் வந்தார்.

அங்கு விநாயகப் பெருமானை கஜமுகன் மூன்று முறை சுற்றி வந்து ஆர்பரித்தார். பின்பு யானை முகத்தில் காணப்பட்ட சூரனுடன் விநாயகர் போரிட்டார்.

தொடர்ந்து சூரனின் யானை தலையை, தனது தந்தத்தால் கொய்து வதம் செய்யும், சூரசம்ஹாரம் நடைபெற்றது.

அதன் பின்பு தீப ஆராதனை காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசித்தனர்.

சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் கற்பகவிநாயகரை வரவேற்று பெண்கள் வண்ண வண்ண மலர்களால் பூக்கோலமிட்டனர். பின்பு விநாயக புராணம் வாசிக்கப்பட்டது.

What do you think?

சங்கமா முக்கியம் சாப்பாடு தான் முக்கியம்

உலக சாதனை படைத்த கராத்தே பள்ளி மாணவ மாணவிகள்.