in

பார்வை இழப்பு தடுப்பு சங்க நிதி உதவியுடன் இலவச கண் பரிசோதனை முகாம்.

பார்வை இழப்பு தடுப்பு சங்க நிதி உதவியுடன் இலவச கண் பரிசோதனை முகாம்.

 

பார்வை இழப்பு தடுப்பு சங்க நிதி உதவியுடன் தொண்டு அமைப்புகள் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மனிதம் அறக்கட்டளை, குத்தாலம் இந்தியன் சில்க்ஸ் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஜெய பூபாலன் தலைமை வகித்தார்.

இலவச கண் சிகிச்சை முகாமில், கிட்ட பார்வை தூர பார்வை கண்புரை இவைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. கண் அறுவை சிகிச்சைக்கு தேர்தெடுக்கபடுவோர், பாண்டிசேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு இலவசமாக அழைத்து சென்று கண் அறுவை சிகிச்சை செய்து உணவு, கண்ணாடி இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்த முகாமில் 300 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்பரிசோதனை செய்து கொண்டனர். முகாமின் முடிவில் குத்தாலம் இந்தியன் சில்க்ஸின் ரியாசுதின் நன்றி உரை ஆற்றினார்.

What do you think?

சிவகங்கை ஸ்ரீ அன்னை வீரமாகாளி அம்மன் கோவில் பூச்சொரிதல் சிறப்பு அபிஷேக ஆராதனை

நாமக்கல்லை அடுத்த அனிச்சம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ நிதி தீர்த்தருக்கு -15 ஆண்டு குரு பூஜை விழா