சிதம்பரத்தில் அரசு டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டு கொடுத்து மதுபானம் வாங்கிய நான்கு பேர் கைது.
சிதம்பரம் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் சிலர் 500 ரூபாய் பணத்தை கொடுத்து மதுபானம் வாங்கி உள்ளனர். அப்போது 500 ரூபாய் நோட்டுகளை சோதனை செய்தபோது கள்ள நோட்டு என தெரிய வந்தது இதனை அடுத்து அண்ணாமலை நகர் போலீசாருக்கு டாஸ்மாக் ஊழியர்கள் தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த போலீசார் நான்கு பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தபோது கள்ள நோட்டை கொடுத்து மதுபானம் வாங்க வந்ததாக தெரிகிறது.
இதனை அடுத்து உத்தம சோழமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை, முருகேசன், உசுப்பூர் பகுதி சேர்ந்த மகேஷ் அம்மாபேட்டை சேர்ந்த மணிகண்டன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்த 10, 500 ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர் இந்த சம்பவம் அரசு டாஸ்மாக் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


