தேர்தலில் போட்டியிட விசில் சின்னம் அறிவித்ததை தொடர்ந்து தவெக சார்பில் விசில் அடித்து ஊதி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
தமிழக வெற்றிக் கழகத்தினருக்கு தேர்தல் ஆணையம் சார்பில் 2026-ல் போட்டியிட விசில் சின்னம் ஒதுக்கியதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தமிழக வெற்றிக்கழகத்தினர் விசில் சின்னத்தை பொதுமக்களிடம்தவெக சர்வின் விசில் ஊதி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.கொண்டு சேர்க்கும் விதமாக பொதுமக்கள் மற்றும் கட்சியினரிடையே வழங்கி வருகின்றனர்.

அதன் அடிப்படையில் இராமநாதபுரம் நகர் மத்திய பகுதியில் பகுதியில் நகர் செயலாளர் கே.கே.ராஜ்குமார் விஜய் ஏற்பாட்டில் கிழக்குமாவட்டத் தலைவர் மலர்விழி ஜெயபாலா அரண்மனை பகுதியில் வெடி வெடித்து காது கிழிய விசில் ஊதியப்படி அந்த பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னமான விசிலை வழங்கியும் உடன் இனிப்புகளையும் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் இராமநாதபுரம் இளைஞர் அணி செயலாளர் குணசீலன் மற்றும் மாவட்ட ,ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..

