தஞ்சாவூர் சேலஞ்சர்ஸ் இறகு பந்தாட்ட கழகம் சார்பில் மின்னொளி இறகு பந்தாட்ட போட்டி
தஞ்சாவூர் சேலஞ்சர்ஸ் இறகு பந்தாட்ட கழகம் சார்பில் மின்னொளி இறகு பந்தாட்ட போட்டி நடைபெற்றது.

தஞ்சாவூர் சேலஞ்சர்ஸ் இறகு பந்தாட்ட கழகம் சார்பில் ராஜ் நாயுடு கௌசல்யா அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவு கோப்பை மின்னொளி இறகு பந்தாட்ட போட்டியினை ஆடிட்டர் ரவிச்சந்திரன் மற்றும் ரஜினி ரசிகர் மன்ற தலைவர் ரஜினி கணேசன் தலைமையில் நடைபெற்றது.
தஞ்சையில் இரண்டு நாட்கள் மிண்ணொளியில் நடைபெற்ற இறகு பந்தாட்ட போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

கலந்து கொண்டு இறுதி சுற்றுக்கு வெற்றி பெற்ற அணிக்கு 8000 ரூபாய் பரிசு தொகையும் கோப்பைகளும் இரண்டாவது இடம் பெற்ற வீரர்களுக்கு 6000 மற்றும் கோப்பைகளும் வழங்கப்பட்டது.
அரை இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 3000 தொகை வழங்கப்பட்டது.


