வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதாவின் 2025 ஆண்டு திருவிழா கொடியேற்றம்
உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதாவின் 2025 ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது; லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயம், 16 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட மூன்று புதுமைகளினால் கட்டப்பட்ட ஒரு கத்தோலிக்க திருத்தலமாகும்.
உலகப் புகழ்பெற்ற இந்த பேராலயம், மத வேறுபாடுகளைக் கடந்து அனைத்து மக்களாலும் தரிசிக்கப்படும் புனிதத் தலமாக உள்ளது. வங்கக் கடலோரம் அமைந்துள்ள ஆலயம் அமைந்துள்ள இந்த ஆலயத்திற்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
புகழ் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது பேராலாயமுகப்பிலிருந்து திருக்கொடி ஊர்வலம் புறப்பட்டு கடற்கரை சாலை, ஆறிய நாட்டு தெரு உள்ளிட்டமுக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கொடி மேடையை அடைந்தது. தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் திருகொடி புனிதம் செய்யப்பட்டு பின்னர் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.
கொடியானது மெல்ல மெல்ல காற்றில் அசைந்து கொடி மர உச்சியை அடைந்ததும் பக்தர்களின் மரியே வாழ்க என சரண கோஷம் எழுப்பினர், அதே நேரத்தில் வண்ண, வண்ண வானவேடிக்கைகள் மற்றும் அதிர்வேட்டுக்கள் முழங்க ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் ஒன்று சேர ஒளிர்வது கண்கொள்ளாக் காட்சியாக காண முடியும்.
விழாவின் முக்கிய நிகழ்வான அன்னையின் திருத்தேர் பவனி செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி இரவு நடைபெறுகிறது. 8ம் தேதி அன்னையின் பிறந்தநாள் சிறப்பு திருப்பலி முடிந்த பிறகு மாலை கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறும், காலை முதலே வேளாங்கண்ணி முழுவதும் கட்டுக்கடங்கா கூட்டம் அலைமோதி வருகிறது.

வந்திருந்த பக்தர்கள் மாதாவிற்கு மாலை அணிவித்தும், மெழுகுவர்த்தி ஏந்தியும், நேர்த்திக்கடனாக முடி காணிக்கை வழங்கியும், தென்னங்கன்றுகளையும் வழங்கி நேர்த்திக்கடனை நிறைவேற்றி தற்போது கொடி ஏற்றத்தை காண ஆவலோடு பக்தியோடும் காத்திருக்கின்றனர்.


