ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் திருக்கோவிலில் மாசி தெப்பத்திருவிழா கொடியேற்றம்
ஆழ்வார்திருநகரி அருள்மிகு ஆதிநாதர் திருக்கோவிலில் சுவாமி நம்மாழ்வாருக்கு மாசி தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம்.
துாத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில்108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் நவதிருப்பதிகளில் 9வது திருப்பதியும் குருவுக்கு அதிபதியான அருள்மிகு ஆதிநாதா் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருத்தலத்தில் மூலவா் ஆதிநாதா்ராக அருள்பாலிக்கின்றாா்.
இத்திருத்தலத்தில் ஆழ்வாா்களில் முதன்மையானவரான சுவாமி நம்மாழ்வாா் அவதாரம் செய்தாா். சுவாமி நம்மாழ்வாரின் திவ்ய மங்கள விக்ரஹம் வேண்டுமென மதுரகவி ஆழ்வாா் பெருமாளிடம் வேண்ட தாமிரபரணி பொருநல் சங்கனித்துறையிலிருந்து தீா்த்தம் எடுத்துக் காய்ச்சவும் என அசிாிாி கூற.
மாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் கை படாதா உற்சவா் திருமேனி நமக்கு வணங்க கிடைத்தது. இந்த நன்னாளைப் போற்றும் முறையில் ஆண்டுதோறும் மாசி தெப்பத்திருவிழா 13 நாட்கள் கொண்டாடப்படுகின்றது.
இதையொட்டி நேற்று முன்தினம் திருமுளைச்சாற்று ஸ்ரீ கூரத்தாழ்வான் சன்னதியில் இருந்து தேங்காய் வாங்கி வந்து விழா ஆரம்பமாயிற்று. தொடா்ந்து நேற்று ஸ்வாமி மதுரகவிஆழ்வாா் நகரச்சோதனை நடைபெற்றது.
கொடியேற்றதினமான இன்று அதிகாலை திருக்கோயில் நடைதிறக்கப்பட்டு விஸ்வரூபம் காலைசந்தி நடைபெற்றது.
தொடா்ந்து கும்ப பூஜை கொடி பூஜை நடைபெற்றது. பின்னா் நகா்வலம் வந்த கொடிப்பட்டமானது மங்கள வாத்தியங்கள் முழங்க நம்மாழ்வாா் சன்னதி முன் அமைந்த கொடி மரத்தில் (துவஜாரோஹணம்) கொடியேற்றம் நடைபெற்றது.
முன்னதாக கொடிமரத்திற்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. நிறைவாக ஆச்சாாய புருஷா்கள் பிரபந்த பாராயணம் செய்ய சுவாமி நம்மாழ்வாருக்கு கற்பூரஆரத்தி நடைபெற்றது.

இன்றிலிருந்து நடைபெறும் இத்திருவிழாவில் சுவாமி நம்மாழ்வாா் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகின்றாா்.
5ம் திருநாள் கருடசேவை புறப்பாடும் 9ம் திருநாள் தோ்த்திருவிழாவும், 10,11 ம் திருநாளில் தெப்பத்திருவிழாவும் 12ம் நாள் தீா்த்தவாாாியும் நடைபெறும் .
திருவிழா ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி தலைமையில் கோயில் நிர்வாகத்தினர், காாிமாறன் கலை காப்பக டிரஸ்ட் அங்கத்தினா் செய்துவருகின்றனர்.


