நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றம்
அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஆவணி மூலத்திருவிழா இன்றுகாலை கொடி ஏற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. திரளான பக்தா்கள் தாிசனம்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புகளை உடைய அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் ஆவணி மாதத்தில் வரும் ஆவணிமூலத்திருவிழா வெகுவிமரிசையாக நடத்தப்படுகிறது. இந்தஆண்டுக்கான ஆவணி மூலத்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கி 11 தினங்கள் நடைபெற உள்ளது.
இதற்காக அதிகாலை திருக்கோயில் நடைதிறக்கப்பட்டு விஸ்வரூபம் காலைசந்தி பூஜைகள் நடைபெற்றன.
திருவிழா தொடக்கமாக கொடிபட்டம் உலா நடைபெற்றது. பின்னா் கொடிக்கு மாியாதைகள் செய்யப்பட்டு காலை 06.00 – 07.20 க்குள் கொடியேற்றம் நடைபெற்றது.
தொடா்ந்து கொடிமரத்திற்கு மஞ்சள் பால் தயிர் பஞ்சாமிர்தம் இளநீர் சந்தனம் உள்ளிட்ட அபிஷேகத்திரவியம் கொண்டு திருமஞ்சனம் நடைபெற்றது. அலங்காரம்செய்யப்பட்ட கொடி மரத்திற்கு சோடஷ தீபாரதனைகள் நடைபெற்றது. ஏரானமான பக்தா்கள் சுவாமி தாிசனம் செய்தனா்.

திருவிழாவையொட்டி சுவாமி அம்பாளுக்கு தினமும் சிறப்பு வழிபாடு நடக்கிறது. 4ம் திருநாளான வருகின்ற 26ம் தேதி இரவு பஞ்ச முா்த்திகள் வீதிஉலாவும், திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பத்தாம் திருநாள் அன்று கரூவூர் சித்தருக்கு காட்சி கொடுத்து சாப விமோசனம் பெறும் நிகழ்வு வருகின்ற 2ம் தேதி ஆவணி மூலத்தன்று மானூர் அம்பலவாண சுவாமி திருக்கோவிலில் நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை அறங்காவல் குழுவினா் மற்றும் திருக்கோவில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.


