சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா கொடியேற்றம்
உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா மிக விமர்சையாக கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நடராஜர் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் சிவ வாத்தியங்கள் உடன் வேத மந்திரங்கள் முழங்க கொடி மரத்தில் சிவகைலாஷ் தீட்சிதர் கொடியேற்றி வைத்தார்.
ஜூலை 1ஆம் தேதி தேரோட்டமும் இரண்டாம் தேதி ஆனி திருமஞ்சன தரிசன விழாவும் நடைபெற உள்ளது.
பாதுகாப்பு பணியில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மேற்பார்வையில் சிதம்பரம் டிஎஸ்பி லாமேக் தலைமையில் 100க்கு மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.