in

நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை

நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை

 

மீன்வளத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து நாகை மாவட்ட மீனவர்கள்
கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ் பகுதி காரணமாக கடலில் பலத்த காற்று வீச கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது கடந்த இரண்டு நாட்களாக நாகை மாவட்டத்தில் கனமழை பெய்தது.

இதனால் நாகையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.அதன்படி மீன்வளத்துறை மீனவர்களுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்திருந்தது அதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

இதனால் நாகை மாவட்டத்தை சேர்ந்த நாகூர் பட்டினச்சேரி, நம்பியார் நகர், அக்கரைப்பேட்டை, கல்லார், செருதூர், வானவன் மகாதேவி, வெள்ளபள்ளம் ஆற்காடுதுறை, கோடியக்கரை உள்ளிட்ட 27 மீனவ கிராமங்களில் உள்ள 700 விசைப்படகுகளும், 3,500 பைபர் படகுகளும் கரை பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் மாவட்டத்தில் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீன் பிடி தொழிலை சார்ந்தவர்கள் வேலை இழந்து உள்ளனர்.

நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கு மீன்கள் அனுப்பப்பட்டு வந்தது. நாகை மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.3 கோடி முதல் ரூ.5 கோடி வரை மீன்வர்த்தகம் நடைபெறும்.

ஆனால் மழை காரணமாக நாகை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் மீன்பிடித் துறைமுகங்கள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

What do you think?

சிதம்பரம் நடராஜர் கோயில் மழை நீரால் நிரம்பிய சிவகங்கை குளம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை ரோஜா