அகல் விளக்கு உற்பத்தி கூட்டத்தில் தீ விபத்து
விருத்தாசலத்தில், அகல் விளக்கு உற்பத்தி கூட்டத்தில் தீ விபத்தில் ….
10 லட்சம் மதிப்பில் பொருட்கள் சேதம்.
கடலூர் மாவட்டம்,விருத்தாசலம் எம்ஆர்கே நகர் பகுதியில் …….விக்டர் என்பவர் அகல் விளக்குகள் உற்பத்தி செய்யும் தொழிற்கூடத்தில், இன்று காலையில் திடீரென அகல்விளக்கு உற்பத்தி கூட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
அப்போது தீ கொழுந்துவிட்டு மள மள எரிந்தது. தகவல் கிடைத்து விரைந்து வந்த விருத்தாசலம் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சங்கர் தலைமையிலான, தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதில், அகல் விளக்கு தயார் செய்ய பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், ஆயில் உள்ளிட்ட 10 லட்சம் மதிப்பில் ஆன பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது.
தகவல் கிடைத்து விரைந்து வந்த விருத்தாசலம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


