in

குளங்களில் காவிரி நீர் இதுவரை வந்து சேரவில்லை மாவட்ட ஆட்சியரிடம்  நேரில் மனு அளித்த விவசாயிகள்

குளங்களில் காவிரி நீர் இதுவரை வந்து சேரவில்லை மாவட்ட ஆட்சியரிடம்  நேரில் மனு அளித்த விவசாயிகள்

 

குத்தாலம் பகுதியில் குளங்களில் காவிரி நீர் இதுவரை வந்து சேரவில்லை மாவட்ட ஆட்சியரிடம் இன்று நேரில் மனு அளித்த விவசாயிகள்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த குத்தாலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வாய்க்கால் தூர்வாரபடாமல் இருக்கும் காரணத்தினால் வாய்க்கால் வழியாக வந்து குளங்களில் நிரம்ப வேண்டிய காவிரிநீர் இதுவரை வந்து சேரவில்லை இதன் காரணமாக அய்யனார்குளம் மீனாங்குளம் நீரின்றி வற்றி காணப்படுகிறது.

இதுகுறித்து குத்தாலம் விவசாய பிரதிநிதிகளுடன் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாமில் பங்கேற்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

வாய்க்கால் முழுமையாக தூர்வாரப்பட்டால் தான் குளத்தில் நீர் நிரம்பி இருக்கும் நிலத்தடி நீர்மட்டம் உயரும் விவசாயம் செழிக்கும் என்று ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

What do you think?

இடிந்து விழுந்த நிலையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

கல்வி பயில போதிய வசதிகள் செய்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை