in

மழை விட்டும் வடியாத மழை நீரால் விவசாயிகள் வேதனை

மழை விட்டும் வடியாத மழை நீரால் விவசாயிகள் வேதனை

 

திருக்குவளை சுற்றுவட்டார பகுதியில் மழை விட்டும் மூன்று நாட்களாகியும் வடியாத மழை நீரால் விவசாயிகள் வேதனை

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் சாகுபடி செய்துள்ள சம்பா தாளடி பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளது.

மாவட்டம் முழுவதும் சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருக்குவளை சுற்றுவட்டார பகுதிகளில் 5000 ஏக்கர் பரப்பளவில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

குறிப்பாக வலிவலம், கொடியாலத்தூர், ஆதமங்கலம், தென்மருதூர், மருதூர், மாவிளங்கை, உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை விட்டு மூன்று நாட்கள் ஆகியும் தண்ணீர் வடியாமல் தேங்கியுள்ளது.

வாய்க்கால்கள் முழுவதும் புதர்மண்டி கிடப்பதால் தண்ணீர் வடியவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர் இன்னும் மூன்று நாட்களுக்கு மேல் தண்ணீர் தேங்கி இருந்தால் நாற்றுகள் முற்றிலும் அழுகி மறு விவசாயம் செய்யக்கூடிய சூழலுக்கு விவசாயிகள் தள்ளப்படுவார்கள்.

 

இதுவரை சுமார் 20000 வரை ஏக்கருக்கு செலவு செய்துள்ள நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர்.

எனவே வேளாண்மை துறை அதிகாரிகள் உடனடியாக கணக்கெடுப்பு பணியை தொடங்கி உரிய நிவாரண பெற்று தர வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

What do you think?

7 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை

சிதம்பரம் அருகே ஐயப்ப பக்தர்கள் வந்த பேருந்து விபத்து