in

குருவை தொகுப்பு திட்டத்தால் விவசாயிகள் வேதனை

குருவை தொகுப்பு திட்டத்தால் விவசாயிகள் வேதனை

 

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் குத்தகைக்கு சாகுபடி செய்யும் விவசாயிகள் பாதிப்படைந்து நில உரிமையாளர்கள் மட்டுமே பயன்பெறும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள குருவை தொகுப்பு திட்டத்தால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்….

வழக்கம்போல் இந்த வருடமும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறந்து விடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது அதனால் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் குருவை சாகுபடி தொடங்கியுள்ளனர்.

இந்த சூழ்நிலையில் குருவை சிறப்பு தொகுப்பு திட்டம் அறிவித்துள்ள நிலையில் இந்த வருடம் விவசாயிகள் பதிவேற்றம் செய்வதில் சில குளறுபடிகள் உள்ளது நிலம் உரிமையாளர்கள் மட்டுமே பதிவேற்றம் செய்யும் வகையில் கணினியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களை பொறுத்தவரையில் அதிக அளவில் ஆலயங்கள் மசூதிகள் சர்ச் நிலங்கள் அதிக அளவில் உள்ளதால் அதனை குத்தகைக்கு சாகுபடி செய்யும் விவசாயிகள் பலனடைய வாய்ப்பு இல்லை இந்த நடைமுறை சிக்கலை சரி செய்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இதனால் பெரும் அளவில் குத்தகை சாகுபடி செய்துள்ள சாகுபடி செய்ய இருக்கின்ற விவசாயிகள் பாதிப்படைவார்கள் அதனால் குருவை சாகுபடி அதிக அளவில் குறைந்து நெல் கொள்முதலும் பாதிக்கும் இதனை கருத்தில் கொண்டு உடனடியாக அரசு இந்த அறிவிப்பினை திரும்ப பெற்று அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் நடைமுறையில் இருந்த பழைய நடைமுறை அமல்படுத்துமாறு விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

What do you think?

கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் – பி ஆர் பாண்டியன் பேட்டி

அலவந்திபுரம் ராஜகாளியம்மன் ஆலயத்தில் திருநடன வீதி உலா