in

ஆகாய தாமரையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

ஆகாய தாமரையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

 

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாய்க்கால் தூர் வார வலியுறுத்தி கையில் ஆகாய தாமரையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் போலீசார் கைது செய்ய முற்பட்டதால் பரபரப்பு.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா மெலட்டூர் மூன்றாம் சேத்தியில் வட்டாரப் பிரிவுக்கு உட்பட்ட சேத்து வாய்க்கால் துரௌபதி அம்மன் வாய்க்கால் சீதாராமன் வாய்க்கால் கர்ணன் கட்டளை வாய்க்கால் பாண்டுரங்கன் கட்டளை வாய்க்கால் நகுலன் கட்டளை வாய்க்கால் தூர்வரப்படாமல் உள்ளது.

இதில் வெங்காய தாமரை நாணல் புல் மண்டி தண்ணீர் செல்ல முடியாமலும் மழைநீர் வடியாமல் வயல்களில் தேங்கி இதனால் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

இந்த வாய்க்காலை தூர் வார பலமுறை கோரிக்கை வைத்தும் வாய்க்கால் தூர்வாராததால் சாகுபடி பாதிக்கப்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது உடனடியாக தூர் வார வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த விவசாயிகள் வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்ய முற்பட்டதால் பரபரப்பு காவல்துறை வாகனம் முன்பு அமர்ந்து காவல்துறைக்கு எதிராக விவசாயிகளுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்பு பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர் அவர்களை கலைந்து செல்லும்படி வலியுறுத்தியது. பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.

What do you think?

நத்தம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழா

பாபநாசம் அருகே அண்டக்குடி ஸ்ரீ ஜயபத்ர காளியம்மன் ஆலய பால்குட திருவிழா …