in

பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணத்தை வழங்காத தமிழக அரசை கண்டித்து மாவட்ட ஆட்சியர் எதிரே தரையில் அமர்ந்து விவசாயிகள் தர்ணா போராட்டம்

கடந்த ஆண்டு பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அறிவித்த நிவாரணத்தை இதுவரை வழங்காத தமிழக அரசை கண்டித்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் எதிரே தரையில் அமர்ந்து விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு 

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் விவசாயிகள் குறை கேட்பு கூட்டம் இன்று நடைபெற்றது.

கடந்த ஜனவரி மாதம் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமாக மாவட்ட நிர்வாகம் பரிந்துரைத்த ரூ 62 கோடியை மாநில அரசு இன்னும் வழங்காததை கண்டித்தும். குறுவை தொகுப்பு திட்டத்திற்கு வழங்க வேண்டிய ரூ 4 ஆயிரத்தை இன்னும் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.இதனை கண்டித்தும் விவசாய சங்கங்களின் சார்பாக கலந்து கொண்ட விவசயிகள் தரையில் அமர்ந்து மாவட்ட ஆட்சியர் எதிரே உள்ளிருப்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டத்தை விலக்கி கொண்டனர் இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது

What do you think?

ஆதி காமாட்சி அம்மன் கோவிலில் வள்ளி கும்மி ஆட்டம்

கொள்ளிடம் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீர்