in

குறுவை விளைச்சல் பாதிப்பு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

குறுவை விளைச்சல் பாதிப்பு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

 

நாகையில் புகையான் தாக்குதலால் குறுவை விளைச்சல் பாதிப்பு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு அதிக அளவில் குருவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியத்தில் மீனம்பநல்லூர், வாழக்கரை, திருக்குவளை, திருமணங்குடி, சோழவித்யா புரம், கருங்கன்னி உள்ளிட்ட பகுதிகளில் குறுவை அறுவடைப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த பகுதிகளில் புகையான் தாக்குதல் காரணமாக ஒரு ஏக்கருக்கு 40 மூட்டை அறுவடை செய்து வந்த நிலையில் புகையான் தாக்குதலால் 20 மூட்டைகள் மட்டுமே விளைச்சல் கண்டு உள்ளதால் ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் வரை செலவு செய்த நிலையில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கட்டிய இன்சூரன்ஸ் தொகையையும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் மட்டும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து பகுதிகளிலும் கொள்முதல் நிலையங்களை திறக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

What do you think?

தமிழக கோயில்கள் உலக சுற்றுலா தளங்கள் மணல் சிற்பங்கள்

ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் எட்டாம் நாள் காலை தேரோட்டம்