கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் நனைவதாக விவசாயி வேதனை
நாகை அருகே அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் நனைவதாக விவசாயி ஒருவர் வேதனையுடன் கூறும் வீடியோ வைரல்
நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலை அடுத்த சங்கமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் நேற்று பெய்த மழையால் நெல் மூட்டைகள் நனைவதாகவும் போதிய லாரிகள் இல்லாததால் நெல் மூட்டைகள் தேக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் நெல் மூட்டைகள் நனைவதாகவும், மூட்டைக்கு 40 ரூபாய் கொடுப்பதாகவும் விவசாயி ஒருவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


