ரஜினிகாந்த் பிளக்ஸ் பேனருக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம்
பாபநாசத்தில் திரையரங்கில் கூலி படம் வெளியானதை ஒட்டி, ரஜினிகாந்த் ரசிகர்கள் ரஜினிகாந்த் பிளக்ஸ் பேனருக்கு பால் அபிஷேகம் செய்து, சூடம் காட்டி, தேங்காய் உடைத்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் உள்ள சக்தி சினிமாஸ் திரையரங்கில் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் திரையரங்கம் முன்பு திரண்ட ரஜினி ரசிகர்கள் ரஜினிகாந்த் வாழ்க என முழக்கம் எழுப்பியவாறு ஊர்வலமாக திரையரங்கம் வந்தனர்.
திரையரங்கம் முன்பு வைக்கப்பட்டிருந்த ரஜினிகாந்த் பிளக்ஸ் பேனருக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர்…
தொடர்ந்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி தேங்காய் உடைத்து உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.


