அண்ணாமலையார் கோவிலில் மை லார்ட் படம் வெற்றி பெற பிரபல இயக்குனரும் நடிகருமான சசிகுமார் சாமி தரிசனம்
கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மாலை, பிரசாதங்கள் வழங்கப்பட்டது
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு கடந்த சில மாதங்களாகவே தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளை சேர்ந்த நடிகர், நடிகைகள், இந்திய கிரிக்கெட் வீரர்கள், இசையமைப்பாளர்கள் என அனைவரும் திருவண்ணாமலைக்கு வருகை தந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து விட்டு, கோவில் பின்புறம் உள்ள மலையை சிவனாக எண்ணி 14 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று திருவண்ணாமலைக்கு வருகை தந்த பிரபல இயக்குனரும் நடிகருமான சசிகுமார் மை லார்ட் படம் வெற்றி பெற அண்ணாமலையாரை தரிசனம் செய்தார்.
முன்னதாக சம்பந்த விநாயகர் ச ன்னதி அண்ணாமலையார் சன்னதி மற்றும் உண்ணாமுலை அம்மன் சன்னதி உள்ளிட்ட பல்வேறு பிரகாரத்தில் வழிபாடு செய்தார்.
இதனை தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து பிரசாதங்கள் வழங்கப்பட்டது. கோவிலுக்கு வந்திருந்த ரசிகர்கள் சசிகுமாருடன் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

