அரசு மருத்துவமனையில் நடைபெற்ற கண் தான விழிப்புணர்வு பேரணி
அரசு மருத்துவமனையில் நடைபெற்ற கண் தான விழிப்புணர்வு பேரணி. ஏராளமான கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் மற்றும் அரசு இராசா மிராசுதார் மருத்துவமனை இணைந்து நடத்திய கண்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தஞ்சாவூர் அரசு இராசா மிராசுதார் மருத்துவமனையில் நடைபெற்ற இந்த பேரணியை வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முக்கிய வீதிகள் வழியாக சென்ற இந்த பேரணியில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள், செவிலியர்கள் கலந்து கொண்டு கண்தான விழிப்புணர்வு குறித்த வாசக பதாகைகளை கொண்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


