in

பாமக தலைவராக அன்புமணியை நியமித்த தேர்தல் ஆணையம் – கொண்டாட்டம்

பாமக தலைவராக அன்புமணியை நியமித்த தேர்தல் ஆணையம் – கொண்டாட்டம்

பாமக தலைவராக அன்புமணியை தேர்தல் ஆணையம் அங்கீகாரம் செய்து கடிதம் அனுப்பிய நிலையில் விழுப்புரம் கிழக்கு மாவட்ட பாமக சார்பில் திண்டிவனம் நகரில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கப்பட்டன.

திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் மாவட்ட செயலாளர் சங்கர் தலைமையில் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியல் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார், மாவட்ட தலைவர் சேது, பாமக பொறுப்பாளர்கள் சண்முகம், கவிதா, தர்மன், ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

What do you think?

கொலை செய்து விடுவதாக காதலனிடம் கூறும் காதலியின் தாய்

தியாகிகள் தினம் பாமக சார்பில் ஆலோசனை கூட்டம்