in

சிவ ஆலயத்தில் உலக நலன் வேண்டி – ஏகாதச ருத்ரா – ஹோமம்

சிவ ஆலயத்தில் உலக நலன் வேண்டி – ஏகாதச ருத்ரா – ஹோமம்

 

நாமக்கல்லை அடுத்த நன்செய் இடையாறு திருவேலீஸ்வர் சிவ ஆலயத்தில் உலக நலன் வேண்டி – ஏகாதச ருத்ரா – ஹோமம்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த நன்செய் இடையாற்றில் திருமணிமுத்தாற்ங்கரையில் அமைந்துள்ள அருள்மிகு சுந்தரவல்லி அம்பிகா சமேத திருவேலீஸ்வரர் சுயம்பு சிவாலயம்.

இந்த சிவ ஆலய பஞ்சபாண்டவர்களில் ஒருவரான பீமானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆலயம் கிபி 10ம் நூற்றாண்டு ஸ்தலம் இந்த ஆலயம் முதலாம் ராஜாராஜசோழனும் அவரது மகன் ராஜேந்திர சோழனும் கட்டினர் என்பதற்கு கல்வெட்டு சான்று உள்ளது.

உலக நலன் வேண்டி – ஏகதச ருத்ர ஹோமம் மிக சிறப்பாக நடைபெற்றது அப்போது மூலவர் திருவேளீஸ்வரருக்கு பஞ்சகவ்வியம், சந்தனாதி தைலம், பஞ்சாமிர்தம் தேன் நெய் பால் தயிர் இளநீர் பல ரசம், கரும்பு சாரு, சந்தனம், பன்னீர் விபூதி, கலச தீர்தம் கொண்டு உட்பட 11 வகை வாசனை திரவியபெருட்கள் கொண்டு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு தீப உபசரிப்புகள் காண்பித்த பின் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் திருவேலீஸ்வரரை வணங்கி சென்றனர்.

What do you think?

பராமரித்து வந்தவரை ராட் வில்லர் நாய் கடித்து குதறியதில் மூக்கு துண்டானது

குத்தாலம் அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வார விழா